Sudharshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அந்த வகையில் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அது வெளிப்பட்டுள்ளது. எனவே, கருத்து பரிமாற்றம், கலந்துரையாடல் என்பவை இடம்பெற்றால் மட்டுமே எந்த விடயமும் வெற்றியளிக்கும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
'இலங்கை நாடாளுமன்றத்தில் இதுவரை பல வரவு-செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை எவ்வித மாற்றங்கள் இல்லாமலும் மக்களின் கருத்துக்களை செவிமடுக்காமலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், ஜனநாயக ரீதியிலான வரவு-செலவுத் திட்டம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்' என அவர் மேலும் கூறினார்.
ஹட்டன், திலகாஸ் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற தோட்ட தலைவர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'இந்த வரவு-செலுவுத் திட்டத்தை பலரும் குறை கூறுகின்றனர்;. ஆனால், இது ஜனநாயக ரீதியில் அமைந்த வரவு-செலவுத் திட்டமாகும். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் நலன் தொடர்பான விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்ட பின்பு அவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டால் தாக்கல் செய்யப்பட்டதுதான். அதனை திருத்த முடியாது. அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து கூற முடியாது. ஆனால், இம்முறை அவ்வாறு அல்ல. பலர் இதனை விமர்சித்தார்கள். தொழிற்சங்கங்கள் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய தரப்பு நியாயங்களை தெளிவுப்படுத்தினார்கள். அதற்கு பிரதமர் செவிமடுத்து மாற்றங்களை முன்மொழிந்துள்ளார்' என அவர் மேலும் கூறினார்.
44 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
14 Apr 2026