Gavitha / 2021 ஜனவரி 07 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹாலிஎல பகுதியின், டிக்வல தோட்டத்தின் சமகிபுர கிராமசேவையாளர் பரிவுக்குட்பட்ட ஹெரனவெலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கற்குவாரியால், மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்து ஆக்கபூர்வமான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கைகள், மூன்று மாதங்களுக்குள் சமர்பிக்கப்படல் வேண்டும் என்றும், ஹாலி-எல பிரதேச செயலாளர் எச்.பி.ஏ.ஜி.அனுருத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததை அடுத்து, அவர், இது தொடர்பாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
இதன் அடிப்படையில், இது குறித்து ஆராயும் பொருட்டு, பதுளை மாவட்ட அரசாங்க அதிபரி தமயந்தி பரணகம தலைமையிலான கூட்டமொன்று, பதுளை அரசாங்கச் செயலகத்தில், இன்று (06) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, இந்தப் பாதிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது என்றும் இது தொடர்பாக முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு, அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகள் தொடர்பாக மதிப்பாய்வு செய்வதற்கும், குழுவொன்றும் நியமிக்கப்படடது.
அத்துடன், விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பித்து முடிவு எடுக்கும் வரை, கற்குவாரி சில நிபந்தனைகள், தடைக்கு உட்பட்டு நடத்தப்படல் வேண்டும் என்று, கற்குவாரி உரிமையாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
35 minute ago