Kogilavani / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்
மலையகத்தில் நீடித்து வரும் சீரற்ற வானிலை காரணமாக, அக்கரப்பத்தனை ஹோல்புறூக் தோட்டத்தில் கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இப்பகுதியில் வாழ்ந்து வரும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 பேரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகைள மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினார்.
மேற்படி தோட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (4) இரவு 10 மணியளவில் மண்மேடுகளில் இருந்த பாரிய கற்;பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாய தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவ்விடயத்தை நுவரெலியா பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக அக்கரப்பத்தனைக்கு பொறுப்பான கிராமசேவர் குழந்தைவேல் தெரிவித்தார்.



2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago