2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கழிவுத் தேயிலையை கொண்டுச் செல்ல முற்பட்டவர்கள் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித்  ராஜபக்ஷ

வான் மற்றும் லொறிகளில் கழிவுத் தேயிலையை ஏற்றிச்செல்லப்பட்ட  மூவரை ஹட்டன் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மேபீல்ட் தோட்டத்தின் தொழிற்சாலையில் கழிவு தேயிலையை நபரொருவர் லொறியில் வந்து ஏற்றிச்செல்வதை அறிந்த மேற்படி பிரதேச மக்கள் லொறியை சுற்றி வளைத்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,   கழிவு தேயிலை தூளை கொண்டு செல்ல முயற்சித்த  சந்தேக நபரான வர்த்தகர் உட்பட மேலும் இருவரை கைதுசெய்துள்ளதுடன் லொறியில் கொண்டு செல்லவிருந்த 6000கிலோவுக்கும் மேற்பட்ட கழிவுத் தேயிலை மற்றும் நல்ல தேயிலை என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .