Janu / 2023 ஜூன் 21 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி பிரிவிலேயே காட்டெருமை வேட்டையாடப்பட்டு, இறைச்சி பொதியிடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்துள்ளது.
சந்தேக நபர்கள் கைதாகும்போது அவர்களிடம் 54 கிலோ இறைச்சி இருந்துள்ளது. ஏனையவை தோட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இறைச்சி மருத்து பரிசோதனைக்காக சுகாதார கால்நடை வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago