Freelancer / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை உணவகம் ஒன்றில் கடமை புரியும் பெண்மணி ஒருவர் நேற்று மாலை கடமை முடிந்து வெளியே வரும் போது தனது கணவனால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டுள்ளார்.
தெமோதர, உடுவர பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளார்.
மனைவி கடமை புரியும் ஹப்புத்தளை நகரில் உள்ள உணவகத்திற்கு வருகை தந்த கணவன் உணவகத்துக்கு சென்று மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது மனைவியை கடமை முடிந்து வெளியே வரும் போது உன்னை நான் கத்தியால் குத்துவேன் என்று கூறிவிட்டு வெளியே வந்த கணவன் மனைவி கடமை முடிந்து வெளியே வரும் வரை காத்துக் கொண்டு இருந்துள்ளார்.
கணவன் கூறியதை பொருட்படுத்தாமல் வந்த மனைவி மீது கணவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த பெண்மணி அயலவர்களின் உதவியுடன் தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், சந்தேகநபரை ஹப்புத்தளை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
39 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
39 minute ago