Yuganthini / 2017 ஜூன் 18 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-உமாமகேஸ்வரி
இரத்தினபுரி நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால், தாம் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக, இரத்தினபுரி மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, பல பிரதேசங்களில் டெங்கு நோய் பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலேயே, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்துக் கிடப்பதாகவும் குப்பைகள் குவிந்துக் கிடக்கும் பகுதிகளெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இரத்தினபுரி நகரின் சில பகுதிகளில், ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாதுள்ளதால் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதாக, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, குப்பைகளை முறையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, இரத்தினபுரி நகரசபை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
38 minute ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
6 hours ago
7 hours ago
7 hours ago