Kogilavani / 2017 ஜூன் 21 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}








மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
ஹட்டன் -டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், குப்பைகளை உக்கும் குப்பை, உக்காத குப்பை என வகைப்படுத்தி வைக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வகைபடுத்தப்படாத குப்பைகளை, நகரசபை சுத்திகரிப்பாளர்கள் சேகரிக்க மாட்டார்கள் என்றும், ஹட்டன் -டிக்கோயா நகரசபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குப்பைகளை வகைப்படுத்துவது தொடர்பில், குடியிருப்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயற்றிட்டத்தை, நகரசபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், நேற்று முதல் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைவாக, நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு, கள விஜயம் மேற்கொண்ட பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள், விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன், குப்பைகளை வகைப்படுத்துவது தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago