Gavitha / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட குயின்ஸ்பெரி தோட்டத்தில், தபாலகம் ஒன்று இன்மையால், தோட்ட மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக, தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
20 வருடங்களுக்கு முன்னர், இத்தோட்டத்தில் உப தபாலகம் ஒன்று இருந்தது என்றும் இதனால், கடிதங்கள் தாமதமாகவே கிடைக்கப்பெற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அந்த உபதபாலகமும் மூடப்பட்டமையால், கெட்டபுலா தபாலகத்துக்கே, இத்தோட்டத்துக்கான தபால்கள் வருவதாகவும் எனினும் இவற்றைப் பெற்றுக்கொள்வதில், பாரிய சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தோட்டத்துக்கென தனியான தபால் விநியோகஸ்தர் ஒருவர் இன்மையால், உரிய நேரத்தில் தபால்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால், தாங்கள் அடகு வைத்த பல நகைகள் தொடர்பான உரிய அறிவிப்பு கடிதம் கிடைப்பாதமையால், அவை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் பலரின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இத்தோட்டத்துக்கு தபாலகம் அல்லது தபால்காரர் ஒருவரை நியமித்து, இப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு குயின்ஸ்பெரி தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025