Janu / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தன்னை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் அறுவரே குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
குறித்த தேயிலைத் தோட்டத்தின் மரமொன்றில் இருந்த குளவி பொடியை வள்ளைச்சார் தாக்கியதால் கிளர்ந்த குளவிகள், தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026