Gavitha / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத் திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரியவின் அழைப்பின் பேரில் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திலேயே, இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அடிப்படையில், கேகாலை மாவட்டத்துக்கு ஒரு பல்கலைக்கழகம், சிறந்த கிரமாங்களை உருவாக்குதல், கிராமத்தின் எழுச்சி உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு கேகாலை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்துவது குறித்தும், இம்மாவட்டத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, நிவாரணங்களை முறையாகப் பெற்றுக் கொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
14 minute ago
15 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
19 minute ago
26 minute ago