Kogilavani / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சனகுமார ஆரியதாச
கலேவெல - கெப்பிடிய, ரன்வெடியாவ பிரதேச வீடொன்றுக்கு முன்னால் அமைந்துள்ள நுழைவாயிலில் (கேட்) மோதுண்ட பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று, நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய மொஹமட் இப்ஷான் என்ற பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர், மேலும் சில மாணவர்களுடன் இணைந்து, நேற்று முன்தினம், பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தொழுகையை மேற்கொண்ட பின்னர், மூன்று நண்பர்களுடன் இணைந்து கெப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்குப் பின்னால் தங்கியிருந்துள்ளதாக, பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அங்கு வந்த நபரொருவர், அவர்களை எச்சரித்து விரட்டியுள்ள நிலையில், அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இந்த மாணவர், குறித்த இடத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு வேகமாக ஓடிச் சென்றுள்ள நிலையில், மூடப்பட்டிருந்த அவரது வீட்டு நுழைவாயிலில் மோதுண்டுள்ளார்.
இந்தச் சம்பவம், இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பின்னர், மாணவரைக் காணாமல், அவரது பெற்றோர் தேடியுள்ளதையடுத்து, இரவு 8.30 மணியளவில், கேட்டின் அருகில் இருந்து, அம்மாணவன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவரின் சடலம், கலேவெல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக, கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
18 Apr 2026