2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘கொவிட்-19 பாதிப்பால் கல்வித்துறை தோல்வியடையக் கூடாது’

சிவாணி ஸ்ரீ   / 2020 மே 12 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கலவரங்களுக்கும் முப்பது வருட யுத்தத்துக்கும் கொடுத்த இலங்கையின் கல்வி நிலையை, கொவிட்-19 தோற்று தோற்கடிப்பதற்கு, இடமளித்துவிடக்கூடாது என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுவது குறித்தும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், கல்வி அமைச்சின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாண மட்டத்திலான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று (11) சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

1971ஆம், ஆண்டு, 1988, 1989ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களையும் முப்பது வருட யுத்தத்தையும் இலங்கையின் கல்வி எதிர்கொண்டுள்ளது என்றும் அப்போதுகூட, பல்வேறு முறைகளில், நாட்டில் கல்வித்துறை செயற்பட்டதாலேயே, நாட்டில் டொக்டர்கள், பொறியியலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பல கல்விமான்கள் உருவாகியுள்ளனர் என்றும் கூறினார்.

எனவே, தற்போது,  அரசாங்கம், சுகாதார பிரிவினர்கள் வழங்கும் ஆலோசனைகளை நேர்மையாகக் கடைபிடித்து நாட்டின் கல்வித்துறையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றும் கல்விப் பொது தர உயர் தர வகுப்புகளை முதலில் ஆரம்பித்து, ஏனைய வகுப்புகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .