Freelancer / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை - வேமதில்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (R)
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026