R.Maheshwary / 2022 மார்ச் 29 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா- சாமிமலை, பாக்றோ தோட்டத்திலுள்ள அம்மன் கோவில் உடைக்கப்பட்டு, அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன.
நேற்று (28) காலை கோவிலின் பூசகர் வழமைப்போல் கோவிலுக்குச் சென்ற போது, கோவில் கதவிலுள்ள பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு, கோவில் நிர்வாக சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து தோட்ட மக்களும் கோவில் நிர்வாக சபையினரும் கோவிலுக்குள் சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகை, உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026