2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதை இ.தொ.ச அனுமதிக்காது

Kogilavani   / 2016 ஜூன் 21 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

'கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதை, இலங்கை தொழிலாளர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இதனால், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் இல்லாமல் செய்யப்படுகின்றன' என அச்சங்கத்தின் உபதலைவர் கு.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, 'கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், எமது கோரிக்கைகள் தொடர்பிலும் செவிசாய்க்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.    

இலங்கை தொழிலாளர் சங்கத்தின் தோட்டத் தலைவர்களுடனான   கூட்டம், ஹட்டன் தலைமைக் காரியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில், அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்தால், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கலாமென ஒருசாரார் கூறியிருந்தனர். தற்போது தேயிலையானது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. தொழிலாளர்களை வதைத்தே, கம்பனிக்காரர்கள் இலாபமடைந்து வருகின்றனர்' என்றார்.

'இந்நிலையில், அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும்பட்சத்தில், தொழிலாளர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.

தொழிலாளர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக,  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களோடு கைகோர்க்க, கூட்டு தொழிற்சங்கங்கள் தயாராகவே உள்ளன. ஆகவே, எமது கோரிக்கை தொடர்பில் மேற்படி தொழிற்சங்கங்கள் செவிசாய்க்க வேண்டும்' என அவர் மேலும் கோரினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .