2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

குடும்பச் சண்டை: சிறுவனுக்கு வெட்டு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

தனது வளர்ப்பு மகனை கத்தியால் வெட்டியக்குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மஸ்கெலியா பெரியநடு தோட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் கர்த்தர் (வயது 38) என்பவரை, எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் பதில் நீதவான் தமயந்தி பெர்னாண்டோ, ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற குடும்பச் சண்டையின் போது மேற்படி நபர், தனது மனைவியை கத்தியால் வெட்ட முற்பட்டுள்ளார். இச்சண்டையை பார்த்துக்கொண்டிருந்த குறித்த நபரின் வளர்ப்பு மகனான சிந்துஜன் (சகோதரனின் மகன்) சண்டையை விளக்க முற்பட்டபோது அவனது கைவிரலில் வெட்டுவிழுந்துள்ளது.

சிறுவனின் கைவிரல் துண்டாகும் நிலையில் காணப்பட்டதால் உடனடியாக சிறுவன் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். எனினும், அங்கிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைதுசெய்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.    இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .