2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கிராமிய வங்கிகளின் புனரமைப்புக்கு ரூ. 95 மில்லியன் ஒதுக்கீடு

Sudharshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இலங்கையில் அமைந்துள்ள அனைத்து கிராமிய வங்கிகளின்  வெளிப்புறத் தோற்றம் ஒரே வடிவத்தில் அமைய வேண்டும் என்ற, அரசாங்கத்தின் புதிய யோசனைக்கு அமைய, மத்திய மாகாணத்திலுள்ள 28 கிராமிய வங்கிகளின் வெளிப்புறங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக  95 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மாகாண முதலமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான சரத் ஏக்கநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களிடம் இதற்கான காசோலைகளை கையளித்தார்.

மத்திய மாகாணத்திலுள்ள 28 கூட்டுறவு சங்ககங்களின் ஊடாக நிர்வகிக்கப்படும் 28 கிராமிய வங்கிகளையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .