Sudharshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்சிலி பகுதியில், சனிக்கிக்கிழமையன்று (09) குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐவரும், டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களில் மூவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் இருவர், வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .