Kogilavani / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை 20ஆம் மைல்கல் பகுதியில் வைத்து கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒருவழி பாதையாக இடம்பெறுவதாகவும் கினிகத்தேனை பொலிஸார் கூறினர்.
தலவாகலையிலிருந்து கொழும்புக்கு 12 தொன் நிறையுடைய தேயிலை தூளை ஏற்றிச்சென்ற கொள்கலனே இன்று அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஒருவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறினர்.


11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026