2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

குழந்தை பராமரிப்பு நிலையம் திறப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சிறுவர் பராமரிப்பு கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மூலம் 85 இலட்சம் ரூபாய் செலவில் இரத்தினபுரி புதிய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தை பராமரிப்பு நிலையம் (னுயல ஊயசந ஊநவெநச) இன்றுப் புதன்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, சப்ரகமுவ மாகாண சிறுவர் பராமரிப்பு கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, மாகாண சபை உறுப்பினர்களான யெஹியா எம்.இப்ளார், சலித கருணாரத்ன, அசோக ஜயவர்தன, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர, இரத்தினபுரி மாநகர சபையின் முன்னாள் நகரபிதா நிலந்த ரொஷான், சப்ரகமுவ மாகாண சிறுவர் பராமரிப்பு கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் டி.எம்.மாலணி மற்றும் இரத்தினபுரி மாநகர சபை மற்றும் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .