Kogilavani / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தம்புள்ள, கபுவத்தை பிரதேசத்தில் சட்டவிரோத மிருகக்காட்சிசாலையை நடத்தி வந்ததாகக் கூறப்படும் ஹோட்டல் உரிமையாளரை, வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்துள்ளனர்.
ஹோட்டலொன்றின் பின்புறத்தில், இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட கூடுகளில் ஆந்தை, முள்ளம்பன்றி, ஆமை போன்ற உயிரினங்கள் அடைத்து வைக்கப்பட்டிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சீகிரிய வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு, பிரதேசவாசிகள் வழங்கியத் தகவலைத் தொடர்ந்தே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விலங்குகள் காயமடைந்திருந்ததன் காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவற்றை அடைத்து வைத்திருந்ததாக, மேற்படி நபர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago