சிவாணி ஸ்ரீ / 2020 ஜூன் 02 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களின் அனைத்து அரச நிறுவனங்களிலும் உணவகங்களை சுகாதார விதிமுறைக்களுக்கமைய திறப்பதற்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபைக் கட்டடத் தொகுதியிலுள்ள உணவகம், சுகாதார விதிமுறைக்கமைய நவீன முறையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ, இன்று (02) திறந்து வைத்தார்.
இந்நிலையில், சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள், வைத்தியசாலை, உள்ளுராட்சி நிறுவனங்கள், உட்பட ஏனைய நிறுவனங்களிலுள்ள உணவகங்களை சுத்தம் செய்து சுகாதார விதிமுறைகளுகமைய திறப்பதற்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago