2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறப்புரை: பின்னூட்டல்கள் எதிர்பார்ப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, விசேட சிறப்புரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில், இன்று இரவு 7.45 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, இ.தொ.காவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

பன்பலை 102.1, 102.3 ஆகிய அலைவரிசைகளிலும் www.SLBC.LK என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் இச்சிறப்புரையை கேட்கலாம்.

சமூக, சமயப் பணியாளரும் இ.தொ.காவின் ஊடக இணைப்பாளருமான தேவதாஸ் சவரிமுத்து, சிறப்புரை வழங்கவுள்ளார்.

எனவே, மலையக சமூகநல ஆர்வலகர்களிடமிருந்து நிகழ்ச்சி தொடர்பான பின்னூட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 071-6876548 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி, பின்னூட்டங்களை தெரிவிக்கலாம் என்று, இ.தொ.காவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X