Kogilavani / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
சிவனொளிபாத மலைக்கு, கடந்த இரண்டு தினங்களில் மட்டும், 3 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனரென்று தெரிவித்த நல்லதண்ணி பொலிஸார், இதன் காரணமாக, நல்லதண்ணி, மஸ்கெலியா ஆகிய பகுதிகளில், இன்று (25) வரை, வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது எனவும் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஒரு வாரகாலமாக, யாத்திரிகர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன், யாத்திரிகர்களின் நலன் கருதி, விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், அம்பகமுவ பிரதேச செயலகத்தால், சுகாதர சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தனர்.
புனித பூமிக்கு வருகைதரும் யாத்திரிகர்கள், போதைப்பொருட்கள், வாத்தியக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறும், நல்லதண்ணி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
21 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
58 minute ago