2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

’சோளப் பயிர்ச்செய்கை மீளக் கட்டியெழுப்பப்படும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இக்பால் அலி

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கரை ஆண்டுகால ஆட்சி காலத்தில், இந்நாட்டில் சோளப் பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிவித்த கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், சோளச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இல்லாமற் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, வாரியப்பொலவில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல், உள்ளுர் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிகாலத்திலேயே, நாட்டில் சோள உற்பத்தி, சக்திமிக்கதாகக் கட்டி எழுப்பப்பட்டது என்றும் இலங்கையில் இருந்து சோளத்தை தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும் கடந்த நான்கரை வருட ஆட்சியில் சோள உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்  சிறந்த வழிகாட்டலுடன் சோளப் பயிர்ச் செய்கை மீண்டும் சிறந்தமுறையில்  கட்டி எழுப்பப்படும் என்றும்  வெளிநாடுகளுக்கு சோளம் ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து இலங்கையில் முட்டை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் கோதுமை உற்பத்திகளை இலங்கையிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

சோளப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான வரப்பிரசாதங்களை விவாயிகளுக்குப் பெற்றுப்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் முட்டை உண்போரின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் நாளொன்றுக்கு 80 இலட்சத்தில் இருந்து 90 இலட்சம் வரையிலான முட்டைகள் நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .