Niroshini / 2017 மே 02 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்
மாணவர்களுக்கு சீரான பஸ் சேவையை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி, இராகலை - நுவரெலியா பிரதான வீதியினை மறித்து கந்தப்பளை மற்றும் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் ஜோன்ஸ் தோட்ட தொழிலாளர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
காலை 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்பாட்டத்தினால், இராகலை -நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.
இராகலை மற்றும் கந்தப்பளை,நுவரெலியா போன்ற பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் சென் ஜோன்ஸ் தோட்ட மாணவர்கள், காலை வேளையில் பயணிக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நுவரெலியா டிப்போ பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை.
குறித்த தோட்டத்திலிருந்து பாடசாலைகளைகளுக்கு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிக்கின்றனர்.
எனவே, இதற்கு உடனடியாக தீர்வு ஒன்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்று தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த நுவரெலியா இ.போ.சபை உயர் அதிகாரிகளுடன், சென்ஜோன்ஸ் ஆலயத்துக்கு அருகில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago