Sudharshini / 2016 ஜூன் 05 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
அதிகரித்துள்ள மின் பாவனையை ஈடுச்செய்வதற்காக, சிறு மின் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சிறு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மிக நியாயமான பணத்துக்குக் கொள்வனவு செய்யவும் மின்சார சபை தயாராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டி, உடதும்பறையில் ஈரான் நாட்டின் உதவியுடன் 1,070 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட மின்விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர், 'மின்வசதி இன்மையால் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்திலேயே தமது கற்றலைத் தொடர்கின்றனர்' என்றார்.
'மின்சார சபை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாகும். ஆனாலும், நாம் சேவை அடிப்படையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க விரும்புகின்றோம். உடதும்பறை போன்ற பின்தங்கிய பகுதிகளில் மின்சார வசதியை பெற்றுக்கொடுப்பதற்காக பயனாளர்களுக்குக் கொடுப்பனவுத் தொகையை அதிகரிக்க முடியும். ஆனால், அதனை வெளிநாட்டு உதவிகளுடனேயே பெற்றுக்கொடுக்க முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.

4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026