Kogilavani / 2017 மே 04 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம்.ரம்ஸீன்
கம்பளை நகர் கம்பளவெல பகுதியில், மூன்று வயது சிறுவன் உட்பட 25 வயது இளைஞன், புதன்கிழமை முதல் காணாமால் போயுள்ளதாக, உறவினர்கள் கம்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த வர்த்தகரொருவரின் மூன்று வயது மகனும் உறவினரான இளைஞனுமே, இவ்வாறு காணாமால் போயுள்ளனர்.
இவ்வர்த்தகரின் வர்த்தக நிலையத்துக்கு வந்த வர்த்தகரின் உறவினரான முஹம்மத் அசாம் என்ற இளைஞன், முஹம்மத் சல்மான் என்ற மூன்று வயது சிறுவனை அழைத்தக்கொண்டு சென்றதாகவும், பின்பு இவர்கள் வீடு திரும்பவில்லை என்றும், கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை மாலை குறித்த இளைஞனின் அலைபேசியில் இருந்து அழைப்பு ஒன்று வந்ததாகவும், அலைபேசியில் தொடர்புகொண்டவர் அன்றைய தினம் மாலை மீண்டும் அழைப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்த போதிலும், இதுவரை எதுவித அழைப்புகளும் எடுக்கப்படவில்லை என்றும் உறவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை, கம்பளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago