Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
யுnஉhழசடெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் லிந்துலை பொலிஸாருடன் இணைந்து நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகளும் சுகாரார உத்தியோகத்தர்களும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (01) சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, உணவகங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், மதுபான சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் டெங்கு பரவும் வகையில் காணப்பட்ட வீடுகள் மற்றும் கடைத்தொகுதிகளுக்கு சிவப்பு பத்திரிக்கை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சுத்தங்களை பேணும் வகையில் மஞ்சள் பத்திரிக்கை அறிவித்தலும் வழங்கப்பட்டன.
தோடர்ந்து 3 நாட்களுக்குள் டெங்கு பரவும் சூழலில் இருந்து தத்தமது கடைத்தொகுதிகள், வீடுகள் ஆகியவற்றை சுத்தம் செய்யாவிட்டால் மறு அறிவித்தலின்றி உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தல் விடுக்கபட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி நகர்ப்பகுதிகள் மட்டுமன்றி தலவாக்கலை, நாகசேனை, லிந்துலை, மெரேயா, அகரப்பத்தனை, டயகம போன்ற தோட்ட பகுதிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டு டெங்கு பரவும் சூழலிலிருந்து பொது மக்களை காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.


1 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
9 hours ago