2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தங்கச் சங்கிலி அபகரிப்பு

Kogilavani   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை-ஸ்பிரிங்வெளி வீதிக்கு அருகிலுள்ள வியாபார நிலையத்தின் பெண் உரிமையாளர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை, அபகரித்துக் கொண்டு சென்ற கொள்ளையர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், அலைபேசி மீள்நிரப்பு அட்டையைக் கொள்வனவு செய்வதைப் போன்று ஏமாற்றி, பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளனர் என, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுமார் 90ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியே அபகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், தங்கச் சங்கிலியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .