2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தங்கையை கர்ப்பமாக்கிய தமையனுக்கு வலை வீச்சு

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

தனது தமையனால் கர்ப்பிணியாக்கப்பட்ட 17 வயது தங்கையை, கண்டியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மொனராகலை நீதவான் நீதிமன்றம், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தது.

இந்நிலையில், சிறுமியின் இந்நிலைமைக்கு காரணமான சகோதரனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் மொனராகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நக்கல பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியொருவர், திடீர் சுகயீனம் காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகளின்போது, இவர் 6 மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தனது சகோதரனே இதற்கு காரணமென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், தலைமறைவாகியுள்ள சகோதரனைத் தேடி கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .