Sudharshini / 2016 ஜனவரி 24 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, பல்லேகல பிரதேசத்தில் தந்தையொருவரின் தாக்குதலுக்கு இலக்காகி, ஒரு வருடமும் எட்டு மாதங்களும் நிறைந்த ஆண் குழந்தையொன்று சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெள்ளிக்கிழமை (22) இரவு கணவன்-மனைவிக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது மதுபோதையில் இருந்த கணவன், தனது மனைவியைத் தடியால் தாக்க முற்பட்டுள்ளார். குறித்த நபரின் கையிலிருந்த தடி தவறி குழந்தையின் மீதுப்பட்டு குழந்தை படுகாயமடைந்துள்ளது.
இந்நிலையில், குழந்தையை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று குழந்தை உயிரிழந்துள்ளது.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபரை, பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago