Gavitha / 2016 மார்ச் 15 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா, பாலித ஆரியவங்ச
எல்ல , நாவலகம பகுதியின் முதலாம் மைல் கல்லுக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றுக்கு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோர் தீவைத்ததில், குறித்த வீட்டிலிருந்த இருவர் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், உபாலி காமினி குணசேகர (வயது 49) அவரது மகனான ரவிஸ்க குணசேகர (வயது 16) ஆகிய இருவருமே தீக்காயங்களுக்குள்ளாகி, ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இத்தீயினால், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதெனவும் சேத விவரம் இதுவரை மதிப்பிடப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் இதுவரை கண்டறியவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
3 minute ago
12 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
26 minute ago