Princiya Dixci / 2017 மே 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, பத்மெடில்ல நீரினைக்கு மேலாக, உமா ஓயாவுக்குக் குறுக்கே அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தல்பிடிகல நீர்த்தேக்க வேலைத்திட்டத்துக்கு 174 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மதிப்பீட்டுத் தொகையில் 85 சதவீதத்தை வழங்குவதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அக்கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கத்துக்கும் சீனாவின் வங்கியொன்றுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, இந்த யோசனையை முன்வைத்தள்ளார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026