2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

தலைமறைவான தாயை தேடி பொலிஸார் வலைவீச்சு

Kogilavani   / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

தாயினால் கைவிடப்பட்டுச் சென்ற 3 பிள்ளைகளையும் தன்னால் பராமரிக்க முடியாதென தந்தையொருவர், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவாயவைச் சேர்ந்த ஜே.புஸ்பராஜ் என்ற நபர், மனைவியின் பராமரிப்பில் தனது  12, 5, 2 வயதுடைய பிள்ளைகளை விட்டுவிட்டு கொழும்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இச்சிறுவர்களை தனது சகோதரியின் வீட்டில் விட்டு தாய் தலைமறைவாகியுள்ளார்.  

இதனை அறிந்த மேற்படி நபர்,  பிள்ளைகள் மூவரையும் பொறுப்பேற்றதுடன், தனக்கு நிரந்தரத் தொழிலின்மையினால், தொடர்ந்தும் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதென்று வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, வெள்ளவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித்த பெரேரா, தந்தையுடன் பிள்ளைகள் மூவரையும்; தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை வெள்ளவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2 வயதுடைய குழந்தை காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பதால் அக்குழந்தை வெள்ளவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற தாயை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .