Janu / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி, மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும்,தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான , தாதி ஒருவரை கடந்த 21 ஆம் திகதி,தாக்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ, கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் ரசான்ஜி ரத்நாயக்க முன்னிலையில் வியாழக்கிழமை (26) அன்று ஆஜர்படுத்திய போது சந்தேக நபர் எச்சரிக்கப்பட்டு 200, 000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் , முறைப்பாட்டாளரும் சந்தேக நபரை அச்சுறுத்தியதாக சந்தேகநபர் நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025