Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
ஹட்டன், குடாஒயா விநாயகர் புறம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து திருடுவதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞரை, ஹட்டன் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.
குடாகமையைச் சேர்ந்த இளைஞரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன், வீட்டின் கூரைப் பகுதியை கழற்றிக்கொண்டு உட்புகுந்ததாகவும் இதன்போது வீட்டிலிருந்த குழந்தையின் அலரல் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டார், மேற்படி இளைஞனை கையுமெய்யுமாகப் பிடித்து, மரமொன்றில் கட்டி வைத்துள்ளனர்.
இதுத் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026