Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Gavitha / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்டப் பகுதிகளில், மார்ச் மாத நடுப்பகுதி வரை, பங்குனி உத்திர திருவிழாக்கள், தோட்ட ஆலயங்களில் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும் என்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்வதில் கட்டுப்பாடுகள் அவசியம் என, ஜனநாயக தேசிய ஆசிரியர் சங்க செயலாளர் எஸ். பாலசேகரம் தெரிவித்துள்ளார்.
இன்று முதல், மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை, பாடசாலைகள் அனைத்துக்கும் முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, முக்கிய அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று (24) விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் திருவிழாக்களுக்காக, நாட்டின் ஏனைய பகுதிகளுக்குத் தொழில் நிமித்தம் சென்றுள்ளவர்கள், தங்கள் ஊர்களுக்கு திரும்பவர் என்றும் நாட்டில் கொரோனா நிலைமை இன்னும் கட்டுப்படுத்தப்படாத காரணத்தால், திருவிழாக்கள் இடம்பெறும் தோட்டங்களில், மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு, பாடசாலை மாணவர்களை அனுப்புவதைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025