Janu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவனகல பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரி இப்பன்னார ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் வசிக்கும் , மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 39) ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக சில நாட்களாக வீட்டிற்கு போகாமல் சற்றுத் தொலைவில் உள்ள வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் தனியாக தங்கியிருந்த நிலையில் சனிக்கிழமை (03) அன்றிரவு உணவு அருந்திவிட்டு வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் அவரது கையில் அக்குள் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
மேலும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
11 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
31 minute ago