Editorial / 2024 ஜூன் 17 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேங்காய் ஒன்று தலையில் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர். கலஹா, தெல்தோட்டை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற சிறுமியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
தந்தை சிறுமியை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீட்டின் முன்புறம் முப்பது அடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து காய்ந்த காய் ஒன்று அவள் தலையில் விழுந்தது.
பின்னர் அதே சிறுமியை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அந்த வைத்தியசாலையில் இருந்து சிறுமியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்கள் வசிக்கும் வரிசை வீடுகளுக்கு அருகாமையில் உள்ள தென்னை மரங்களில் இருந்தே தேங்காய் விழுந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடுகளில் மேலும் பல சிறு பிள்ளைகள் மற்றும் பலர் இருந்த போதும் இங்குள்ள அபாயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
6 minute ago
22 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
29 minute ago
46 minute ago