Editorial / 2017 செப்டெம்பர் 02 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில், இன்று (02) அதிகாலை 3 மணியளவில், திடீரென ஏற்பட்ட தீ காரணமாக, தொழிற்சாலையின் சில பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொழிற்சாலையில் பொறுத்தப்பட்டுள்ள விறகடுப்பின் புகை வெளியேரும் பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக, தொழிற்சாலையின் இரண்டாவது மாடியிலுமு் ஏனைய சில பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.
அத்தோடு தீ ஏற்பட்டதன் காரணமாக, தேயிலைத் தூளும் தேயிலைக் கொழுந்துகளும் தீக்கிரையாகியுள்ளன. இதனையடுத்து, குறித்தத் தோட்ட மக்கள், ஹட்டன்-டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவினர், திம்புளை பத்தனை பொலிஸார் ஆகியோர் இணைந்து, தீயை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




12 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago