2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தேயிலை மலைப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம்

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெபெத்த பகுதியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பதுளை - பசறை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் தேயிலை மலைப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம்  கிடப்பதாக பதுளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பெண் தெபெத்த டிவிஷன்  வெவஸ்தையை சேர்ந்த லெட்சுமணன் சந்திரலேகா எனும் 58 வயதுடைய பெண்மணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பாக பதுளை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .