R.Maheshwary / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
உயர்தர தேயிலைகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை- கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட தேயிலைத் தூள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான தேயிலை ஏலத்தில், டஸ்ட் இலக்கம் முதலாம் தர தேயிலை தூள், 1,550 ரூபாய் விலைக்கு விற்கப்பட்டு, சாதனை படைத்தது.
இந்தத் தேயிலை எம்.எஸ்.இம்பெரியல், எம்.எஸ்.போப்ஸ் மற்றும் வோக்கர் ஆகிய தனியார் ஏற்றுமதி நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் மிகவும் தரமான தேயிலை தூள் வகைகளான டீபியோபி, பியோபிஎப், பியோபிஎப் எஸ்பி, மற்றும் டஸ்ட் இலக்கம் ஒன்று ஆகியன சிறந்த விலைகளைப் பெற்றுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago