2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள் இடைத்தரகர்கள்’

எம். செல்வராஜா   / 2020 மே 20 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிற்சங்கங்கங்களைச் சார்ந்தவர்கள், இடைத்தரகர்களாக இருந்து வருவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் குற்றஞ்சாட்டினார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் பதுளைப் பணிமனையில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெருந்தோட்ட நிர்வாகங்களால்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உலர் உணவுப் பொருள்களில், பல்வேறு முறைகேடுகளும் சுரண்டல்களும் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பதுளை மாவட்டத்தின் பெரும்பாலான தோட்ட நிர்வாகங்களால் விநியோகிக்கப்பட்ட உலர் உணவுப் பொருள்கள், ஆரம்பித்தில் நிவாரணமாக வழங்கப்படும் தோற்றமே காணப்பட்டது என்றும் எனினும் பின்னர், அதற்கான முழுப்பணமும் மூன்று தடவைகள் தொழிலாளர்களின் சம்பளத்தில் கழிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நிவாரணப் பொருள் விநியோகமும் பொய்யாகி மூன்று தடவை கழிக்கும் விடயமும்  பொய்யாகி, கடைசியாக, முழுத் தொகையும் ஒரு மாதச் சம்பளத்திலேயே கழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைக்கு, எட்டப்பர்களே உடந்தையாக இருந்து வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .