R.Maheshwary / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக இ.தொ. கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தையின் போது ஆயிரம் ரூபாய் சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் இணங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனைத்து உறுதி மொழிகளையும் எழுத்து மூலம் அறிவித்த பின்னரே, தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுமென்றும் இ.தொ.கா அறிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025