Editorial / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை லோனக் தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிநபர் ஒருவர், இன்று (21) காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தனம் சந்ரகுமார் என்பவரே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தோட்ட நிர்வாகமானது தனக்கு நீண்டகாலமாக வேலை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறியே, மேற்படி நபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு மேற்படி நபர், குறித்த தோட்டத்தில் முகாமையாளராகக் கடமைபுரிந்த ஒருவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதை காரணம் காட்டி தோட்ட நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்கு வேலை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
14 வருடங்களாக தான் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லையென பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளியான சந்தனம் சந்திரகுமார் தெரிவித்ததோடு, இதன் காரணமாகவே இன்று தான் தனிப்பட்ட ரீதியில் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளியின் மனைவியும் தொழில்வாய்ப்பற்றவர் என்பதால் மேற்படி நபரின் குடும்பம் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போராட்ட இடத்துக்கு வருகைத்தந்த வட்டவளை பொலிஸாஸார் மற்றும் வட்டவளை பெருந்தோட்ட முகாமையாளர் ஆகியோர் மேற்படி நபருடன் கலந்துரையாடியதுடன், ஒருவார காலத்துக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்படி நபர் போராட்டத்தைக் கைவிட்டார்.

7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026