Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
“பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பாடசாலைகள் குறித்து தோட்ட நிர்வாகம் கவனத்திற் கொண்டு, இவ்விடயம் குறித்து தோட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கம்பனி உயர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி தேவையான காணிகளை பெற்று கொடுக்க நடவடிக்கை” என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு தேவையான காணிகளை தோட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்று கொள்வது குறித்து இரத்தினபுரி மாவட்ட தோட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தலைமையில் நேற்று (14) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் இம்மாவட்டத்தில் 16 பாடசாலைகள் சேதமாகியுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மாற்று இடத்தில் அமைப்பதற்கு தேவையான காணிகளை மாகாண கல்வி அமைச்சுக்கு பெற்று கொடுக்க வேண்டும். அதேபோன்று இம்மாவட்டத்தில் தமது குடிறுருப்புகளை இழந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
“அவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று குடியிறுப்புகளை அமைத்து கொடுக்க வேண்டும். இதற்காக தேவையான காணிகள் அவசியமாக உள்ளதால், அக்காணிகளை தோட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்று கொள்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
“எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பாடசாலைகள் குறித்து தோட்ட நிர்வாகம் கவனத்திற்கொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும்” என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago