Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
தேசிய மீலாத் நபி தினஅங்குரார்ப்பனை விழா, முஸ்லிம் சமய கலாசார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் கண்டி, பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவன கேட்போர் கூடத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்வருடம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மாவட்டம் மற்றும் மாகாண மட்ட தேசிய மீலாத் நபி தின விழாப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் பணப் பரிசில்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன. இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026