Kogilavani / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, பிரௌன்ஸ்வீக் தோட்டத்தில் சனிக்கிழமை(8) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு விரைவில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு, வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக்கொண்டு சென்றுள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்தினால் மேற்படி தோட்டத்தில் 16 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இதனால்;, இவ்வீடுகளில் வசித்து வந்த 18 குடும்பங்களைச் சேர்ந்தோர். நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்குத் தனித்தனி வீடுகளைக் கட்டிக்கொடுப்பது தொடர்பாக பிரௌன்ஸ்வீக் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்கள் தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நாட்கள் ஆரம்பித்துள்ளதால் இம்மக்களை, தோட்டத்திலுள்ள சனசமூக நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026